நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அவதி

ஆழ்துளை இதயத்தின் ௨ணர்வு
ஆற்றல் படுத்தாமையயின் தரவு
மானிட வாழ்விியல் தெரிவு
மகிழ்சியைத் தொலைத்திடும் நிகழ்வு

மனம் சிணுக்கி நூல்சிறைபட்ட
அவசரம்
மதி சிதறிடும் கண்ணாடிப்
பாத்திரம்
மீண்டும் மீண்டும் அவசரப்படுத்தும்
விம்பங்கள் சாய்வதும் சரிவதும்
சாரலாய் தூவுவதும் அவதின்
அவசர ஆதிக்கம்

ஆழ்ந்து மூழ்கிய நிகழ்வுகள்
ஆடத்தொடங்கிடும் தெரிவுகள்
ஆயுளை விழுங்கும் விரைவுகள்
ஆறுதல் அவதியின் விழுதுகள்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan