” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_

கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும்

வெள்ளைமனசு பூத்திருக்கு விரும்பும் இராகம் கனிந்திருக்கு

காற்றுவெளி ஓரத்திலே கானம் இசைக்கும் நேரத்திலே

தனிமையும் வெறுமை இல்லையே தனிச்சுகமே

பனிமலராய் நானும் பக்குவமாய் பாடலொன்றை

எண்ணமும் பாயுதே ஏழிசையும் மீட்டிடவே நன்றாய்

தெள்ளத் தெளிவாகி தெவிட்டாத பாசுரமும்

மரங்கள் அசைந்தாட மனதும் இசைந்தாட

குருவிகள் குரல்கொடுக்க குதூகலம் பிறந்திருக்க

அருவிபோல் அகம் குளிர ஆனந்தம் குலவிடவே

சருகுகள் சத்தமிடத் தாளங்கள் ஒலிபரப்ப

தேவமங்கையாக தேனிசை நானெடுத்து பரவியே நின்றிடவும்

வளைந்தாடும் செடிகளுமோ தலையாட்டி இரசித்திடவே
சிவரூபன் சர்வேஸ்வரி

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading