இரா.விஜயகௌரி

பள்ளிக்காலம்

துள்ளித்திரிந்த காலம்
துடிப்பை நிறைத்த செயல்கள்
ஆளுமை தொடுத்த நொடிகள்
அடங்கா வேகத்தின் முனைப்பு

கவலைகள் கணத்திலும் இல்லை
கனிந்தெழும் நட்பின் இழைவு
வேரினை பலமாய் நிலைத்து
நாளைய. பொழுது அதன். அடிக்கல்

செயல்கொள் வீரத்தின். தொடுகை
சிந்தனைத் திறனதன். பாய்ச்சல்
அழகாம் வாழ்வதன் செழிப்பு
அங்கு பூத்தெழும் மலர்களாய் வார்ப்பு

சொர்க்கத்தை பூமியில் வரைந்தால்
பள்ளியின் வாயிலை நோக்கும்
எழிலாம் இளமையின் அழகை
இழைத்து நெய்தெழும் பள்ளி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading