திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

ராணி சம்பந்தர்

பணம் என்றால் பிணமும்
வாய் பிளந்தே திறக்குமே
திறக்கும் பை நிரம்பினால்
நினைவிலும் கனவிலுமே
பல நன்றிகள் பிறக்குமே

உறவுகளிற்கு ஊட்டி ஊட்டி
நாடி நரம்பு சுருண்டு சலிக்க
ஒன்றாய்ப் பிறந்தவைகள்
கறந்து பட்டபாடு கை ,கால்
வலிந்து நறுக்குமே

தொட்டில் பழக்கம் சுடுகாடு
தட்டில் வாங்கி வழக்கமாயிட
துட்டில் தேங்க உழறிய பொய்
பிரட்டுகள் தூங்கி அறுக்குமே

வேட்டு வைக்கும் கோட்டுப்
போட்ட வெவ்வேறு புதுப்புது
யோசனைகள் கோயில்
கிணறு வெட்ட, மலசலகூடம்
கட்ட எனக் கறக்கும் வழிகளில்

சிக்கிய எம்மவர் இறைக்கும்
பணத்தால் விழிக்குமா உலகு
என்பது விடை காணா ஒன்றே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading