சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உணர்வு

ஜெயம்

உள்ளத்தில் தினமும் எழுக்கின்ற அலை
சொல்லப்போனால் இது தூங்காத நிலை
பல நேரங்களில் உண்மையாகவே படைக்கும்
சில நேரங்களில் நம்மையே உடைக்கும்

சொல்லாத வார்த்தைகளை சொல்லச் சொல்லும்
செல்லாத பாதையிலும் செல்லச் சொல்லும்
எத்தனை கதவுகள் மனித மனதிற்கு
அத்தனைக்கும் ஒரே திறவுகோல் உணர்விங்கு

உளத்து ஓவியர் வடிவங்கள் வரையும்
தெளிவாயும், சில மங்கலாயும் தெரியும்
நம்மை தெரியவைக்கும் கண்ணாடியும் இதுவே
நம்மை மறைத்து மூடுவதும் அதுவே

நேரமும் இதை மட்டுப்படுத்த முயலாது
யாரும் அதை கட்டுப்படுத்த இயலாது

Author: