12
Feb
உயிரான உறவு
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என்
மூச்சுள்ள வரை உனை சுமப்பேன்
பல பிள்ளை ஈன்றபோதும்
பாரபட்சமன்றி பாசம் தந்து
திகைக்க வைக்கும் அன்பு மழையே
தித்திக்க வைக்கும் தெய்வீகச் சுடரே!
பிள்ளையின் கனவை தன்
பெரும் வாழ்வாய்க் கொண்டு
வெற்றிக்காய் பாடுபடுபவரே
வெண்மை உள்ளம் கொண்டவளே
சொல்லில் வடிக்க முடிக்கா காவியமே
சொற்களும் உன்னிடம் தோற்குமே
உயிரான உறவு நீயே அம்மா..
உன்னைப் புகழ வார்த்தை இல்லை எனக்கு….
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.