அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

எனையாளும் சூரியனோ………

இரா.விஜயகௌரி

விடிகாலைச் சூரியனோ -இவள்
விரித்தெழுதும் பாசவலை – நிதம்
புன்னகையுள் கட்டி வைத்து
புதிர் எழுதும் காரிகையாள்

பரிவோடு நோக்கிடுவாள் – எனை
பரிதவித்து தேடிடுவாள்
அரவணைத்து முத்தமிட்டு
அன்பினிலே புதைத்திடுவாள்

அவள் உதிர்க்கும் குரலசைவில்
அமிழ்தெனவே மொழி சுவைக்கும்
அச்சார உறவெழுதி அடி மனதில்
உறுதி கொண்டு நிலையிடுவாள்

அவள் முகத்தல் பலர் சாயல்
மூத்தோரின் உறவு சொல்லும்
எதை எழுத எதை உரைக்க
உதிரத்தின் பின்னலிலே பின்னலிடும்
பேர்த்தியிவள்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading