” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
284
“ஆசான்”
வாத்திமார் பற்றி
வருகின்ற செய்தி
ஆத்திரம் தருகுதே
அளவுக்கு அதிகம்.

மாதா பிதா போல
மதிக்கின்ற தெய்வம்
பேயாய் பிசாசாய்
நடக்கின்ற கோலம்.

சின்னஞ் சிறுமியாய்
சில்மிச வதைக்குள்
தன் மனம் சிதைவுள்
தள்ளாடும் நிலையில்

முறைப்பாடு ஒன்று
மூத்தவள் தந்து
சிறை வாசம் கொண்டு
சிக்கினான் என்று

சேதியை லண்டன்
செய்தித் தாள் கொண்டு
வீதி அருகு தமிழ்
வீட்டில் இருந்து.

தாயார் மேல் சேட்டை
ஆசான் மேல் சாட்டை
சேய் அடி போட்ட
செய்தியும் மன்றில்.

இங்கு மட்டுமா
இன்றல்ல அன்றும்
பங்கம் தொடர் கதை
படிப்பகம் எங்கும்

பிரம்படி போட்டு
பிள்ளைகள் காயம்
நிரந்தரமாய் மாசு
ஆசானில் சூழும்.

ஆசானின் வீட்டு
அடுப்படி வேலையும்
கூசாமல் ஏவிடும்
கொடுமையில் மலையகம்.

வேதனம் குறியாய்
வேலையை புரியார
மாலையில் ரியூசன்
வர சொல்லி பணிப்பார்.

இடமாற்றம் வந்தால்
எதிர்த் எழ பணிப்பார்
விடலைகள் எதிர்பில்
வீதியில் எழுவார்.

கண்ணியம் இல்லா
கயவர்கள் லஞ்சம்
கையளித் எடுக்கும்
தொழிலாய் இதுவும்.

ஏறியாய் இருந்து
ஏற்றத்துக் உதவும்
ஆயிரம் ஆயிரம்
ஆசான்கள் உண்டு.

களைகளை களையும்
காரியம் புரியும்
அதிகார வர்க்கமும்
லஞ்ச வலைக்குள்.

ஆசான்கள் பொறுப்பில்
தலைமுறை நெறிக்குள்
ஆசான்கள் உணர்ந்தால்
உலகமே நெறிக்குள்.

எல்லாளன்

Nada Mohan
Author: Nada Mohan