திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

ஒற்றைச் சொல்லில் …

வசந்தா ஜெகதீசன்…
ஒற்றைச் சொல்லின் ஓங்காரம்
உலகாய் விரியும் ஓம் வார்த்தை
உடலும் உள்ளமும் மெருகு பெறும்
ஓமெனும் ஒலியே அடிநாதம்

அழகுற எம்மைச் செதுக்கி வைக்கும்
அமைதியை உளத்தில் நிலைக்க வைக்கும்
அரோக்கியத்தின் வழித்துணையாய்
ஆழ ஒலிப்போம் ஓம் ஒலியை

எம்மைச் சூழும் கவலைகளும்
எண்ணற்ற சிந்தை ஓட்டங்களும்
மனதைத் தாக்காது அமைதி பெற
ஆளும் ஆற்றல் ஓம் ஒலிக்கு

பல்துறை நாட்டார் நாட்டமுடன்
பயன்பெறும் யோகவழி நிலையே
ஓம் ஒலிக்கு முதன்மை நிலை
ஓங்கார வடிவின் ஒற்றை வரி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading