திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

ஔவை

பெளர்ணமி இரவில்….
=====================

வெட்ட வெளியிலொரு வட்ட முழுநிலவு
வானமதில் கதைபலதை உரைக்கும் -அது
வாழ்வுதனில் கனவுகளை நிறைக்கும்

கொட்டும் பனியிரவில் பட்டு உடல்நடுங்க
காதலது கண்சிமிட்டி அழைக்கும் – மனம்
காட்சிகளைக் கவியெழுத நினைக்கும்.

சிட்டுக் குயிலிரண்டு தொட்டுக் குலவிடவும்
சோலைமரம் தன்நிலையை மறக்கும் -அதில்
சேதிபல உள்மனதில் இருக்கும்

நட்ட நடுநிசியில் இட்ட கவி வரிகள்
நாளையதில் இனியவைகள் சேர்க்கும் -அது
நானிலத்தில் விடிவுகளை நோக்கும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading