முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

கடந்த ஆண்டே

ஜெயம் தங்கராஜா

கவி 754

கடந்த ஆண்டே

இரண்டாயிரத்து இருபத்துநாலே
உன்னிடம் அனுபவப்பட்டதைச் சொல்லவா அன்றி
அனுபவித்துப் பெற்றதை சொல்லவா
புத்தம்புதிதாக நீ பிறக்கும்போது வரவேற்று கைகுலுக்கினேன்

இனிய தருணங்களை எனக்கென்றே உற்பத்திசெய்தாய்
மகிழ்ச்சியை நிகழ்ச்சியாக்கி புன்னகைக்கும் பாக்கியத்தை கொடுத்தாய்
சொந்தத்தை தேடினேன் நீயென்றாய்
சொர்க்கத்தைத் தேடினேன் அதுவும் நீயானாய்

வாழ்வெனும் பயணத்தில் பயனடைந்த வழிப்போக்கனானேன்
நன்மைகளும் நலமும் நீ தந்ததாகவே கருதுகின்றேன்
இதந்தரும் வலிகளற்ற பூக்களாலான வழி அது உன்னருள் என்பேன்
கரம் தந்தார்கள் பலர் அதுவும் உன் வரம் என்பேன்

எதற்காக அவசரப்பட்டு விடைபெற்றாய்
ஏன்தானோ பூமிவிட்டு ஓடிமறைந்தாய்
நித்தமும் பிணைந்திருந்து நண்பனாய் இருந்துவிட்டு
நட்டநடு நிசியில் சட்டென விலகிவிட்டாய்

என்செய்வேன் ஏதுசெய்வேன் இன்னொருமுறை நாம் சந்திக்க வாய்ப்பும் உண்டோ
கண்கலங்கவைத்துவிட்டு கடந்து நீயும் சென்றுவிட்டாய்
பூமியதை பூவனமாய் மாற்றித்தந்து எங்கு சென்றாய்

நன்றியுடன் வாழ்த்ததையும் பங்களிப்பு செய்கின்றேன் பெருமைமிகு ஆண்டு நீ பெருமை சேர்த்த ஆண்டு நீ
இருந்தாலும் இருபத்தைந்தையும் மலர்தூவி வரவேற்கின்றேன்
புதுசும் பழசுபோல் வசமாகினால் வருசத்தை ஆராதிப்பேன்

ஜெயம்
02-01-2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading