புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

கடலின் தாகம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப் பொங்கி உயர
எழுந்திடும் விழி மோகம்

சோகங்கள் சூழும் மேகம்
தாகங்கள் சூறாவளியில்
மொங்கி மொங்கித்
துள்ளும் மழையில்
நனையும் அலை தியாகம்

ஆங்காங்கே மிதந்து சுழலும்
சுறா மீனோ எப்போ விழும்
வானமென வாய் அகன்றிட
இரவு பகல் போராடித்
தள்ளாடும் கடல் கப்பலின்

சாகஷ விளையாட்டுப் பாராது வானமின்னும்
தொடவில்லையே என
உறங்க மறுத்த விழியில்
கடலின் தாகமோ தாகம்.

Nada Mohan
Author: Nada Mohan