ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கணப்பொழுதில்

கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி

கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர் பேடி
அழிக்க நினைக்கும் புல்லுருவிகள் நிலைக்குமா
புனிதர்களின் இலட்சியங்கள் அழியுமா
ஆக்கவும் நினைக்காத ஆளுமைகள் வர்க்கம்
கறையான் புற்றெடுக்கப் பாம்புகள் குடிபுகுந்ததுபோல்
கண்ணியத்தை அழிக்கும் கயமவாதிகள் செயலும்
காலமும் உணர்த்திடும்
கடவுளின் தீர்ப்பும் கடுகதியில் வந்திடும்
கணப்பொழுதில் நீதியும் துலங்கியே நிற்கும்
கானத்தின் இசையாய் வாய்மையும் வரமாகும்
தீனச்செயலும் திருந்திட வழியும் ஏகும்
திருப்பம் தீர்வென திருந்திட வைக்கும்
..

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading