இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கண்ணீர் அஞ்சலி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

கண்ணீர் அஞ்சலி
நவரத்தினசிங்கம் ஐங்கரன்
மண்ணில்:15-10-1988. விண்ணில்: 25-02-2025

ஐங்கரனென பேரிட்டு
அன்பு நிறைந்தவனாய்
எங்களுக்கு. எல்லாம்
நம்பிக்கை கொடுத்து
தூணாக குடும்பத்தை
தூக்கியே நிறுத்தினீர்.

தந்தையை இழந்தபோதும்
தாங்கினீர் குலத்தை
கண்ணுக்குள் நிற்குதய்யா !
குலதெய்வம் போல
உறவுக்கு உயிராய்
உழைப்பையே உவந்தாய் !

வாஞ்சையோடு வரவேற்பும்
வருவோரை உபசரித்தும்
வள்ளலாய் நின்றாய்
வாரியது அகாலமரணம்.
காவல் தெய்வமே ஏன்
காலனிடம் கைகோர்த்தாய்?

பிஞ்சு குழந்தை இரண்டும்
வஞ்சமில்லா மனைவியும்
நெஞ்சில் போட்டு வளர்த்த
அம்மாவும், உற்றவரும்
உன்தன் நிழலில்
கதியென கிடந்தவர்கள்
கதறும் கோலம் காணாயே

தந்தை முகந் தெரியா
வருகையோடு
வயிற்றிலிருக்கும்
வாரிசு வாழுங்காலமெல்லாம்
அப்பா முகம் காண
அருகதையை இழந்ததுவே.

நெடுந்தீவு மண்ணே
நினை இழந்து
வருந்துதையா!
இடை வயதில்
ஏன் மறைந்தாய்
என்று எண்ணி
ஏங்குதையா!

நெஞ்சம் பதறுது
நினைக்கையில் !
நினைவுகளோடு எங்கள்
நெஞ்சத்தில் நீ
நிலைந்திருப்பாய்!
காவல் தெய்வமென
காலமெல்லாம்
குடி இருப்பாய் தெய்வமே!

ஆத்ம சாந்திக்கு அஞ்சலிப்போம் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அத்தை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
(மச்சாளின் மகன்)

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading