கவிஞர் விண்ணவன்

எனது உயிர் நண்பன்.
***~~***~~***~~***~~***
என் துன்பங்களின்
போதும்,
என் இன்பங்களின்
போதும்,

நீ எனக்கு
துணையாகவும்,
ஆறுதலாகவும், இருந்திருக்கின்றாய்.

பாடசாலையில்
எனக்கு ஒரு
பிரச்சனை என்றால்;
முதலாவதாக
வருவதும் நீயே!

யாராவது
என்னைப்பற்றி;
தவறாக உன்னிடம்
கூறினால்,

நீ கூறுவது
ஒன்றுதான்,

அவன் எனது
உயிர் நண்பன்;
அவனைப்பற்றி
எனக்குத் தெரியும்.

தேவை இல்லாமல்
அவனைப்பற்றி
தவறாக பேசவேண்டாம்;
என்று கூறுவாய்.

நீ எனது
நண்பனாக கிடைத்ததில்
எனக்கு எல்லையற்ற
மகிழ்ச்சி.

உனது நட்பிற்கு
நான் என்றும்
அடிமை.
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading