துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத்...

Continue reading

கவிதை

இரா.விஜயகௌரி
மொழிக்குள் விதை விதைத்து
கருவுக்குள் உருவாகி கனிவாகி
கதையல்ல காவியமே இதுவென்று
தைத்த நொடி கவிதை பிறந்த கணம்

சிந்தைக்குள் விழுந்த கரு
சிதையாமல் மொழி இழைய
கன கச்சிதமாய் நெய்த இழை
முத்தெனவே முகிழ்ந்தசையும் கவிதை

செழுமைக்குள் செதுக்கி எழும்
மொழிமகளாள் அழகின் எழில்
நெஞ்சத்தில் புகுந்தெழுந்து வானவில்லாய்
விரிந்தசையும் பெருந்தெறிப்பே கவிதை

ஆம் ஆய்ந்தறிந்துமொழிவதல்ல
அகத்திலெழும் உணர்வசைய ஆங்கு
சிதறி விழும் செந்தமிழின் துகள்களெல்லாம்
காந்தமென கவர்ந்திழையும் பூஞ்சொரிவே கவிதை

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பட்டமரம்... சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு இருப்பிடத்தில் இன்று இயங்காது உறங்கும் முதியோர் காப்பகத்தில் முடங்கியே ...

Continue reading