“கற்றலின் படியே காசினி உயரவே”

நேவிஸ் பிலிப் கவி இல(671) மனிதனை முழுமையாக்கும் கல்வி கற்றலின்வழி வாழ்வோர்க்கு வழிகாட்டும் ஒளியே கல்வியின் சிறப்பு கற்கும்...

Continue reading

கற்றலின் படியே காசினி உயர்வே

ராணி சம்பந்தர் வையத்தில் வாழ்விற்கு கல்வியே உயர்வு தருமே பையப் பையவே போகும் பாதையில் நெருங்கிடும் தடைக்கற்கள் உடைத்திட அது பல்கிப்...

Continue reading

கற்றலின் படியே காசினி ௨யர்வே

வஜிதா முஹம்மட் கற்றலின்நெஞ்சுக்குள்ளே..காரி௫ள் அகன்றி௫க்கும் கல்வியின் வழிஒழுகி..நுண்ணறிவு வீற்றிருக்கும் அறிவின் சிந்தனை ஆற்றலாம் அறியாமை இ௫ள்விழகி மேலோராய் வாழ்வதே...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பாமுகப் பூக்கள்!

எண்ணத்தின் நாற்று
எழுத்தாணி வீச்சு
பன்முகப் படையலாய்ப்
பரவிய ஊற்று

வண்ணக் கதம்பமாய்
வாசனை வீசியே
திண்ணத்தை நிறுத்திய
தேட்டமாம் பதிவு

பாமுகப் பந்தலின்
பதியமாம் ஏடு
பாவை அண்ணா
பதித்த முத்து

வாடா மலரெனும்
வனப்பாம் மிளிர்வு
சூடின ஈர்பத்து
வதனத்தின் களிப்பு

சந்தக் கவியாய்
சிந்திடும் தேனே
தந்தேன் மலர்வாய்
வந்தனம் உனக்கே!

கீத்தா பரமானந்தன்18-01-2022

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading