சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

காதல்!

குடும்பம் என்னும் கோவிலைலே
குலவி நிற்கும் மாருதமாய்
இடும்பை போக்கு மின்னிசையாய்
இணைத்து நின்றே யிதயங்களை
துடுப்பா யியக்கி நித்தமுமே
துணிவைப் பகரு மிணைப்பிதுவே
தொடுத்த சரமாய்த் தோளினையே
தொட்டே யணைக்கும் காதலென!

மழலை மொழியின் இனிமையிலே
மயக்கும் கானக் குயிலினிலே
வளமா மியற்கை வசந்தத்திலே
வருடல் செய்யும் வனப்பிதுவே!
முழவா யிசைத்தே இதயங்களில்
முழுதாய்ப் பொழியும் மோகனத்தில்
அழகே யெங்கும் தாலாட்டாய்
அணைத்தே வருடும் பூமியையே!

உருவ மில்லா உவப்பாகி
உதயம் கண்ட வனைத்திலுமே
பருவ மற்றே பதியமிட்டு
பதித்த முத்தாய் இதுவன்றோ
அருகா வுணர்வா யண்டமெங்கும்
அழகாய்ப் படரும் தொடர்கதையாய்த்
தருதே களிப்பை யாயுளுக்கும்
தரணி யெங்கும் காதலதே!

கீத்தா பரமானந்தன்14-02-2021

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading