கீத்தா பரமானந்தன்

^மாவீரர்கள்

பொங்குது பொங்குது உணர்வலைகள்
போர்கொண்ட தேசத்தின் நினைவலைகள்
செங்களமாடிய வேங்கைகளின்
மங்காப் புகழ் கொண்ட மாவீரநினைவுகள்

வாழ்வினை துச்சமாய் வரித்துக் கொண்டார்
வரலாறு படைத்திட வலி சுமந்தார்
பாருக்குள் மனிதராய் வாழ்ந்து சென்றார்
பலமாக மனங்களில் நிலைத்துவிட்டார்
மாவீரர் சரிதங்கள் பலநூறு
சரித்திரமாவது சில நூறு
ஆசைக்கு தீயை அவனிடடன்
அன்னைமண் விடுவிக்க போரிட்டான்

வீரர்கள் முன்னே நாங்களெல்லாம்
வேரற்ற வெறும் மரங்கள்தான்
வேண்டுதல் செய்வோம் வீரர்களை
விடுதலை நமக்கு கிட்டிடட்டும்

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading