இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நம்பிக்கை

வாழ்க்கை என்னும் சாகரத்தில்
வலிமைத் துடுப்பாய் நம்பிக்கை
தாழ்வு இன்றே கரைசேர்க்கும்
தளர்வை நீக்கி உரங்கூட்டும்!

இறையை மறையைப் போற்றுதலும்
இல்லை என்றே தூற்றுதலும்
துறைகள் தொட்டே மின்னுதலும்
துருவம் தன்னை எட்டுதலும்
நிறைவாய் அவரவர் நம்பிக்கை
நிலைத்துத் தொடருது உலகியலாய்!

முடியும் என்றோர் முனைப்புகளே
முத்தாய்ச் சுகிக்கும் இன்பமெல்லாம்
வடித்துத் தந்த வெற்றிகளாய்
வானும் மண்ணும் பாலமிட்டார்
நொடியில் பாரைச் சுற்றுகிறோம்
நினைவில் பதித்தவர் நம்பிக்கையால்!
நம்பிக்கை நாற்றே கதிராக
நாளைய விடியல் நமக்காகும்!

கீத்தா பரமானந்தன்
24-02-25

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading