மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

“குதூகலம்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை
இலக்கம்_198

“குதூகலம்”
உறவுகள் கூடி
உறவாடி மகிழ்ந்து
சுவைக்கு சுவை சேர்க்கும் உணவுகளும்
உறங்கும் நேரமும் குறைவாச்சு!

இளையவர் சிறுவர் கைகோத்து
குழுக்களாக
விளையாட்டு கூச்சலிட்ட சத்தமும்
விடிய விடிய கதையுமாம்!

புகுந்த வீட்டு அம்மாவும்
உடல்நலம் குன்றி இருந்திட்டார்
பேரன் போத்தி பூட்டன் பூட்டி
ஆடலுடன்
ஆனந்தம் கண்டு மகிழ்ந்திட்டார்!

விடியலை கண்டபின் நித்திரையாம் ஆடல்பாடல் ஆனந்தம் கண்ட விடுமுறை கொண்டாட்டம் இன்னும் இன்னும் எப்போது…?

நன்றி
16.08.25

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading