முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
சிறுமை கண்டு பொங்குவாய்
——————
சிலர் வாழ்வில் பெருமை வடிவம்
பலர் வாழ்வில் சிறுமையே உருவம்
பணம்பெருகப் பெருக புகழ் உச்சம் தொடும்
பணம் இல்லாதோருக்கு புகழின் படியோ மூடிவிடும்
கர்ம வினை என்று சொல்லி
வறுமை கொடுத்தான் இறைவன்
அதைஅனுபவித்து முடி எனச்
சொன்னான் ஜோதிடன்
காலம் காட்டும் கண்ணாடி அதில்
கோலம்போட்டு காம்ம் லீலை போதை கலந்தது
கலக்கும் மக்களினம் தடம் புரண்டது
காலமோ நிற்காது பாய்ந்து செல்லுது
இந்நிலை கண்ட மனிதம்
பொங்கி எழுகிறது
சிறுமை எனத் தெரிந்தே
செய்திடும் மனிதா திருந்தவே
மாட்டாயா
பொங்கி எழும் பானையில்
சர்க்கரை போட இனிப்பது போல
உன்னை நீயே சீராக்குவாய்
சீராக்கும் நிலை கண்டு இனிக்கட்டும்
வாழ்வு
இல்லையெனில்
உன்சிறுமை கண்டு பொங்குவாய்
ஒருநாள்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading