” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு 243
பிறந்த மனை
————-

வாடகை வீட்டில் தான்
வந்தேன் பிறப்பெடுத்து
நாளடைவில்
இரண்டு வீடு மாறி மாறி.
காசு உழைத்து தந்தை ஒரு காணி வாங்கி
எம்மை
பேணி வளர்க்க
முதலில் கட்டியது மண் வீடு .
முதலிட கடுமையாய் உழைத்து
பின்னர் கட்டியது கல் வீடு
மூன்றறை குசினி கால் விறாந்தை
நாம் ஆறு பிள்ளைகள்
ஆறி தேறி
நிம்மதியாய் வளர்ந்தோம்.
நேரிய பனை மர
கூடளுள் எம் வீடு.
ஆடு மாடு கோழி எம்மோடு எம் மனையில் என்றும் கூடி வளர்ந்தன.
வன்னியில் இருந்து வரும் அம்மாவின்
உறவுகள் வைத்தியத்திற்கு வந்தால்
எம்முடைய வீட்டில் தான் தங்குவது வழக்கம்.
வன்னியில் உள்ள எம் சொத்தால் வளம் அடைய
வன்னிக்கு வாருங்கள்
வளம் பெருகும் என்பார்கள்.
அங்கு அப்போ எங்கள் வீடுதான்
பெரிய கல் வீடு அந்த ஒழுங்கையில் எழும்பி நின்றது கம்பீரமாய்
இன்று எங்கள் வீடுதான் சிறிய கல்வீடு அங்கு
பெரிய பெரிய வீடுகள் பிறந்து.
போர்க் காலத்தில் பழுதடைந்தாலும்
வீறு குறையாமல் ஊரில் இன்றும் வீற்றிருக்கும் இல்லம்
நாம் வாழ்ந்த மனை
அன்னை தந்தையுடன்
ஆனந்தமாக வாழ்ந்த மனை
நினைத்தானே இனிமை சுரக்கும் எம் தாய் மனை.
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan