முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 228

பாட்டி

மடிமீது தலை வைத்து
படுத்திட ஆசை
செவியோடு செய்தி
ஒன்று சொல்லிட. ஆசை

நினைத்தது போல
இனிமை கொண்ட உலகம்
இல்லை உணர்ந்தேன்
நம்பியவர்களின் ஏமாற்றும்
நாட்களைக் கடந்து
உணர்ந்தேன்

வெட்ட வெளி போல
தனிமை ஒன்று
எனக்குள்ளும் உண்டு
கட்டி அடக்கும்
தூக்கணாம். குருவி போல
குடும்பமும் உண்டு

முந்தானை சேலைக்குள்
அடக்கிய திண்பண்டங்கள்
இன்னும் வேண்டும்!
திண்டிட முடியா
திண்டாக் கதை
சொல்லவும் வேண்டும்!

முதிர்வு கொண்ட
உன் பேச்சும்
கனிவு கொண்ட
உன் ஸ்பரிசமும்
வேண்டும் என்றுமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading