க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 240
மாவீரரே
நினைவுகளை அழிக்க
நீடிய திட்டங்கள்
நினைவு இல்லங்களை அழித்து
நினைவுகளை தொலைத்திடும்
சதித் திட்டங்கள்

நினைவுச் சுடர்
ஏந்த
நிதமும் தடைகள்
நிந்தனைகள் செய்து
நிதமும் மகிழும் உலகம்!

காவியச் சரித்திரங்கள்
கரைகின்ற ஓவியமாக!

ஏங்கிடும் இதயங்களில்
வாழும் உள்ளங்கள்
எழுதில் மறப்பிக்க
எவராலும் முடியாது!!

உன்னதங்கள் உயர்வாக
என்றும் இதயங்களில்
வாழ்ந்திடும்
மாவீரர்களே !…..

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading