திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்241
தீப ஓளியே

அவன் முகம் பார்க்கிறேன்
அவன் சிரிப்பை பார்க்கிறேன்
மௌனங்களை தரிக்கின்றேன்
கோபங்களை எதிர்கொள்கின்றேன்

எனக்கு மட்டுமே
தெரிகின்ற அந்த
தீப ஓளியில்
எத்தனை குமுறல்கள்!

விரும்பாத பிரிவும்
பிரியங்களின் ஏக்கங்களும்
ஆசைகளின் தாபங்களும்
அன்பின் வெளிப்பாடும்

கூரிய சுடரில்!
குத்தும் வேல்களாக
ஆறாமல் பார்க்கின்றேன்
அது சுடும் கனங்களில்!

ஏற்றவும் விருப்பமில்லை
அனைக்கவும் மனமில்லை
பார்க்கின்றேன் ஓளியை
பார்வைகள் பனிக்கும் வரை !….,

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading