திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
உலகினில் போர்கள்
************************* உயிர்களை மாய்க்கும்
***************************
எண்சீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம் விளம் மா

பலமது வேண்டும் பாரினில் என்றும்
பலரையும் பகைத்திடா
பயனது பெறவே
நலமது ஓங்கும் நானிலம் சிறக்கும்
நசுங்கிடா துயிர்களும் நகர்ந்திடும் நாட்கள்
விலகிடும் சண்டை விரக்தியும் இல்லை
உலகினில் போர்கள் உயிர்களை மாய்க்கும்
உணர்ந்துமே உழைத்திட உயர்ந்திட லாமே!

துலங்குமே பூமி துவண்டிடும் மக்கள்
துன்பமும் துக்கமும் துரிதமாய் விலக
கலகமும் வேண்டாம் காடையர் போக்கு
களங்கமும் ஆக்கிடும் காசினி தன்னை
விலகிட வேண்டும் வீம்புடன் பேச்சு
வியர்வையும் வீணிலே விரயமும் ஆகும்
உலகினைக் காக்க உகந்ததாய்ச் செயல்கள்
உறுதுணை ஆக்கிட உழைத்திட வேண்டும்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading