12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. தலைப்பு : *இயற்கை* காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில் ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள சாலைத் தெருமரங்கள் சாய்ந்தாடி தென்றல்தர அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள் அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள் தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.
தலைப்பு : *இயற்கை*
காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில்
ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக
கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட
நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட
காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட
சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க
மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள
சாலைத் தெருமரங்கள்
சாய்ந்தாடி தென்றல்தர
அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட
குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க
அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க
சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண
இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே
மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள்
அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள்
தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...