சாளரத்தின் ஒளியினிலே!

நகுலா சிவநாதன்

சாளரத்தின் ஒளியினிலே!

சாளரத்தின் ஒளியினிலே
சந்தணக்காற்று வீசுகையில்
சாரல் மழையோசையில்
சாதனைகள் தோன்றுதே!

காதல் ராகம் பாடுதே!
கன்னித்தமிழ் மேவுதே!
மோதல் வந்து முத்தமிட
மோகனங்கள் பேசுதே!

தென்றல் வந்து சேதிசொல்ல
தென்னங்கீற்று வாசம் வீச
மன்றம் மகிழும் கிளுகிளுப்பு
மங்கை மனதை மாற்றுதே!

கன்னல்மொழி பேசிடவே
காந்தள் பூவும் மலர்ந்திடவே
பெண்ணே நீயும் பெருமை கொள்ள
பேசாயோ இந்த ஒளியினிலே

கண்ணில் ஒளி தெரிகையிலே
காவியங்கள் பாடுகையில்
கதிரவனின் காலையொளி
களிப்புடனே மயக்குதெம்மை

நகுலா சிவநாதன்1778

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading