இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1880!

விழிப்புக்கொள் பெண்ணே…!

தலைமைப் பண்பும்
தகை சார் நெறிகளும்
விலை மதிப்பற்ற பாசமும்
வித்தகச் செருக்கும்
உனக்குள் உண்டே..
நித்தம் தோன்றும்
நிறைகளும் குறைகளும்
போரிடும் களமோ
உந்தன் வாழ்வியல்…
அனுபவக் கல்வி
அனுதினம் கிட்டும்
கனிந்திடும் குணத்தால்
கலியுகம் விரட்டு
புதுயுகம் படைக்கும்
புயலினப் பூவாய்
எழுந்திடு மகளே
ஏற்றங்கள் நினதே…
சுமைகள் கூடச்
சுகமென மாற்று
சுகந்தம் விடுதலை
சூழுமே உனைத்தினம்…!
சிவதர்சனி இராகவன்
13/10/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading