சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1784!

தருக்கள் உயிர்க்கும்
காலம்!

உறங்கிக் கிடந்த
தருக்களெல்லாம்
உயிர்ப்புக் கொள்ளும்
காலம் இங்கே
நிறங்கள் காட்டி
சிந்தை பறிக்கும்
மலரினம் நம்மைத்
தேடிக் கூடும் காலம்
இங்கே!!

ஒளியின் மடியில்
உயிர்களின் இருப்பு
விழிகள் மலர்ந்து
வியப்பு எய்தும் கோல
எழில் இங்கே!
ஓய்வின்றிப் புள்ளினம்
பாடல் பாடித் தம் சந்ததி
பெருக்கும்
உணர்வின் சாலம்
சாலப்பொருந்தும்
இலை துளிர் காலம்!!
சிவதர்சனி இராகவன்
22/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading