திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

சிவனுக்காய் ஒரு இராத்திரி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2114

சிவனுக்காய் ஒரு இராத்திரி

படைத்தவன் படியளப்பான்
பாரினைத் தினம் சுமப்பான்
இருளினைத்துரத்தி மெல்ல
ஒளியினை ஊட்டிச் செல்வான்

தந்தையே போல் ஒருவன்
தரணியைப் படைத்த தலைவன்
சிந்தைக்குள் உறையும் பெருமான்
சிறப்புடனே நம்மைக் காப்பான்

ஐந்தொழில் அவன் இயக்கம்
அனைத்திலும் அவன் முழக்கம்
ஆட்டத்தில் அருள் துலங்கும்
அவனின்றி ஏது அசையும்

சடாமுடி கருமை வண்ணம்
கழுத்தினிலே பாம்பு பற்றும்
விடமுண்ட கண்டன் நீயே
விடிவினைத் தருவாய் சிவனே

நெற்றிக் கண் நீதி சொல்லும்
நெறிமுறை வகுத்த வள்ளல்
ஓருடல் ஈருருவம் தங்கும்
இறைவனே போற்றி போற்றி..
சிவதர்சனி இராகவன்
27/2/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading