சிவரஞ்சினி கலைச்செல்வன்

தலைப்பூ சந்தம் சிந்தும். சந்திப்பு. 233. “உச்சி வகிடெடுத்து
ஓர மயிர் பின் இழுத்து
அச்சொட்டா அம்மா
அழகாக பின்னஇவிட
நிறைய பூ தலை சொருகி
நெற்றியிலே பொட்டு வைச்சு
கரை வச்ச பாவாடை
கால் கொலிசில் சரசரக்க
பட்டாடை பள பளக்க
தோட்டோடை களுத்தணியாய்
தொங்கும் முத்து மாலை
தெருவிலே அம்மா கூட
திரிந்த காலம் அது
தெரிந்தோர் என் அழகை
திகட்டு தென்று ,
கண்ணூரு
எரித்து கழிஎன்பர்
என் அம்மா எனை அணைப்பா.
பூவும் இல்லை
பொட்டுமில்லை
தாவி நரை மயிர்கள்
தளருகிற வயது இது
கன்னி பருவத்தை
களிப்பாய் கழித்தேனே!”
.சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading