சிவருபன் சர்வேஸ்வரி

தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே

பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே

பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே

இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே

இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே

பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே

பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா

பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்

கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்

கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே

ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே

வாழ்க வாழ்க வாழியவே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading