தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

என் பஞ்சம் மாறிப் போகவில்லை

கானம் பாடம் குருவியொன்று
கூட்டில் இருந்து கூவுகின்றதே
பாட்டுப் பாடும் பாவையொருத்தீ-
வீட்டிலே சிறையாய் இருக்கின்றாள்

கோட்டைத் தாண்ட முடியாமல்
கோதையவளும் வாழ்கின்றாள்.
காலம் செய்த கோலமென்று- அவள்
கனவு கண்டு விழிக்கின்றாள்

மலரும் மங்கையும் சரி பாதி -நீ
மனசை வைத்து அதை யோசி
நிலவும் காயும் ஒரு நாளில்
நீல வண்டும் உறங்கும் நிமிடத்திலே

தாழ்வு கொண்ட குடும்பத்திலே- அவள்
தலைமகளாய் பிறந்ததாலே
தரிக்க வைத்தார் என்னையுமோ -என்
கூட கலைவது எப்போது?

சீதனமென்னும் கொடுமையினால்
சிறையிலிருந்து வாடுகின்றேன் -என்
பருவம் மாறப் போகின்றது- என்
பஞ்சம் மாறப்போவதில்லை

கவிஞர்…
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading