இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 297 ]
“நம்பிக்கை”

மனித வாழ்வின் ஆரம்பம் ஜனனம்
பாவம் வாழ்க்கை முடியுமிடம் மரணம்
இரண்டுக்கும் நடுவே குறுகிய பயணம்
எல்லைகூறமுடியாத மர்மமான பயணம்

ஆனாலும் பயணத்தில் எத்தனை அவலம்?
நம்பிக்கைதான் உனைக்காக்கும் கவசம்!
பிறக்கும்போது நீயொரு வெற்றுக்கலசம்
அன்னையே உனைக்காக்கும் நம்பிக்கைத்தெய்வம்

கற்றகல்வியே வழிகாட்டும் ஆயுதம்
அன்பான அன்னையும் அறிவுசார்கல்வியும்
பிறழ்விலா நடத்தையும் உயர்த்திடும் உன்னையும்
உலகமே வாழ்த்திடும் உன் நம்பிக்கையும் வென்றிடும்!

நம்பிக்கையும் விடாமுயற்சியும் என்றுமே தோற்றதில்லை
அறிஞர், மேதைகளைப்பார்! ஆன்றோர்களைப்பார்!
தோல்விகளைக்கண்டுமவர் என்றுமே துவண்டதில்லை
நம்பிக்கையே சாதனைகளினடிப்படை என்பது பொய்கவில்லை

இன்றைய உலகின் வெற்றிக்கு சோர்விலாநம்பிக்கையே
காரணமென்பது இன்னுமா புரியவில்லை?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading