சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கனவுகளின் சிறகுகள்

நகுலா சிவநாதன் கனவுகளின் சிறகுகள் கனவுகள் கண்களில் தோன்றினாலும் அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை...

Continue reading

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 163
மனமே சாந்தி அடைவாய்

மனமே மனமே உறங்கா மனமே
தினமும் தினமும் வருந்தும் மனமே
காலம் காலம் கனவு காணும்
இதுவும் இதுவும் கடந்து போகும்

ஆழ்மனக் கடலின் அலைகள் ஓயும்
என்மனக் கோயில் அமைதி காணும்
உயிரும் மெய்யும் ஓன்று சேரும்
துன்பம் நீங்கி இன்பம் பெருகும்

இலையும் உதிரும் துளிர்த்து வளரும்
மனதில் கூட துணிவும் பிறக்கும்
உறவும் மிளிரும் உணர்வும் சேரும்
உலகம் முழுவதும் என் வசமாகும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்

Nada Mohan
Author: Nada Mohan