இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

செல்லாக்காசு

ஜெயம் தங்கராஜா

இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை புறக்கணித்தால்
உன் செயலை அவமதித்தால்

சொல் எடுபடாதவர் என்றானாய்
செல்வாக்கு இல்லாத நபரானாய்
செல்லாக்காசு என்பதாய் உன்னிலை
செல்வம் இழந்ததால் இன்நிலை

பையில் இருக்குமட்டுமே கூட்டம்
கையில் இல்லையென்றால் ஓட்டம்
பொய்யான மனிதரையும் தெரியும்
மெய்யான வாழ்க்கையும் புரியும்

கூப்பிட முன்பே வருவார்
சாப்பிட அமிர்தமே தருவார்
பிள்ளையாகி அக்கறை இருக்கின்றபோது
இல்லையென்றால் ஊருலகம் மதிக்காது

உலக வாழ்க்கை இப்படித்தான்
பழகும் பாசமாக அப்படித்தான்
நிலவரம் மோசமானால் செல்லாக்காசு
நிலைமையோ அற்பமான வெறுந்தூசு

20-06-2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading