செல்வி நித்தியானந்தன்

நம்பிக்கை

இயற்கை இறையுடன்
இல்லறம் இணைவாய்
நம்பிக்கை கொள்ளல்
சாலவும் சிறப்பு

பெற்றவர் பிள்ளைகள்
தொடர்திடும் நம்பிக்கை
மற்றவர் இணைவும்
மாண்புறும் நாளும்

விடியலின் அத்தியாயம்
முடியுமே நம்பிக்கை
விழுந்தும் எழுந்தாலும்
விரட்டிவிடு துணிவாய்

நம்பிக்கை வாழ்வு
நாளை சரிதம்
தும்பிக்கையான் துணை
துலங்கிடும் இறையே

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading