நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

ஜமுனா

காட்சிப் படைப்பு

ஆடைகள் அகற்றி
வெட்கமின்றி
உயிர்போடு
நிற்கின்றன
குளிர்காலக் காடுகள்

வண்ண வண்ண ஆடையணிந்து
கோடையிலே
கூடியாட

மாறாக
அடுக்கடுக்காய்
ஆடைகளை அணிந்தபடி
கூனிக் குறுகியபடி
குளிருள் முடங்கியபடி
முணங்குகிறான்
மனிதன்

ஜமுனா

Nada Mohan
Author: Nada Mohan