ஜெயம் தங்கராஜா

கவி 658

அகதி

துப்பாக்கி அரக்கர்களால்  துரத்தப்பட்ட நிலை
துர்பாக்கியம் அடைந்தவர்களில் ஒருவனாக தூரதேசத்தில்
உயிரைவிட்டு உடல் மட்டுமே புலம்பெயர்ந்தது
வெள்ளையர் நடுவில் அகதிக் கோலமானது

அகதியெனும் புதிய பட்டம் ஒட்டிக்கொண்டது
அன்னிய தேசம் அன்னியனான உணர்வு
வந்த மண்ணின் கலாசாரம் தலைகீழெனினும்
சொந்த மண்ணைப்போல மனிதம் மரணிக்கவில்லை

இருப்பு நிரந்தரமாகி வசதிகள் வரவாகின
இருந்தாலும் தவிப்பும் வாழ்க்கையுடன் ஒட்டியது
ஊரில் சொந்தங்களின் மத்தியிலில்லா வாழ்க்கை
நான், எனக்குப்பின் என்னுடைய பரம்பரை

மொழியையைம் மதத்தையும் உள்வாங்குமா எதிர்காலம்
இரத்த உறவுகள் அருகமையாத இடைவெளி
அகதியாகி செய்த வம்சத்திற்கான துரோகமிது
என்னடையாளம் அகதி ஜெயம் ஒல்லாந்து

நன்றி
ஜெயம்
21-06-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading