ஜெயம் தங்கராஜா

சசிச

மலைப்பு

அந்தரத்தில் நின்று சுற்றுகின்றது பார்
இந்த சம்பவத்தை நடத்தியவர் யார்
உயிரினங்களை உருவாக்கி கவனிக்கின்றார் தந்தையாக
புரிந்துவிடா அளவிற்கு இருக்கின்றார் விந்தையாக

அற்புதங்களை அடுக்கடுக்காய் நிகழ்த்துகின்ற புனிதர்
கற்சிலையாய் வடித்தவரை வணங்குகின்றார் மனிதர்
இற்றைவரை காட்சி அளித்ததில்லை உருவமாக
உற்பத்தியாய் உண்டுபண்ணி இருக்கின்றார் அருவமாக

அறிவிற்கு அப்பாற்பட்ட அதிசய சக்தி
அறியமுடியாது திண்டாடுகின்றது மனித புத்தி
சின்னச்சின்ன அணுக்களுக்குள்ளும் அழகாக வீற்றிருக்கின்றார்
கண்ணுக்குத் தெரியாதிருந்து நன்மைகளை புரிகின்றார்

எவரெவர்க்கு எது தேவை எப்பொழுது
அவரவர்க்கு அள்ளியே வழங்கிடுவார் அப்பொழுது
வாழ்க்கையின் திரைக்குப் பின்னால் செயற்படுகின்றார்
கேள்விக்கு விடைகாணா புதிராக இருக்கின்றார்

ஜெயம்
12-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading