ஜெயம் தங்கராஜா

சசிச

பெருமை

மனிதகுலத்திற்கு எதுதான் மகிமை சேர்க்கும்
பணிவோடு பண்பும் ஒழுக்கத்தை கோர்க்கும்
மண் கடமைகளை சரிவரச்செய்வது பெருமை
தன்னைப்போல் பிறரை நினையாதிருப்பது சிறுமை

தன் சாதியை பெரிதென போற்றிப்புகழுவதும்
தன் பரம்பரையை மூச்சுவிடாமல் புழுகுவதும்
இவைகளையெல்லாம் பெருமைகளென தம்பட்டமடிக்கும் மானிடா
எவையிங்கு பெருமையென இன்னும் அறியாததும் ஏனடா

சொத்துப்பத்துடன் பகட்டாக வாழ்வதில் பெருமை
பத்துத் தலைமுறைக்கு பணத்தைச்சேர்த்ததில் பெருமை
தான் தன்குடும்பம் நல்லாயிருப்பதால் பெருமை
மாண்பு இதுவென ஆண்டாண்டுக்கும் பெருமை

வகுப்பெடுத்தாலும் உண்மையான பெருமையை அறியாதோர்
பகுத்தறிந்தேனும் அதன் பக்கங்களை புரியாதோர்
இன்னும் பழைய பஞ்சாக்கத்தை பாடியபடி
என்னத்தை சொல்வதிங்கு பெருமையோ நாறியபடி

ஜெயம்
16-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading