திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

உயிர்க்கொடை

அல்லும்பகலும் இனம் காக்க உழைப்பு
இல்லை உறக்கம் இதுவே நாளாந்த பிழைப்பு
வெய்யிலோ மழையோ இல்லையொரு பொருட்டு
செய்யும் பணிக்கு தடையாயில்லை இருட்டு

வீரர்கள் இவரைப்போல் வையகத்தில் எங்கு
யாரவர் இருந்தால் உரைப்பீரோ இங்கு
உயரிய நோக்கத்துடன் புறப்பட்ட புயல்
உயிரையும் கொடையாக்கி செய்திட்ட அருஞ்செயல்
தலைவன் வழிகாட்டலில் அறத்துக்கான போராட்டமது
களைக்காது களமாடிய மறவர்கள் கூட்டமது
முடியாத நிலையிலும் முடிந்ததை முடித்தார்
விடிவுக்காய் வெடிபட்டு விட்டுயிர் மடிந்தார்

இனத்திற்கு கிடைத்திட்ட மாபெரும் செல்வங்களே
தனக்கென வாழாத மாவீர தங்கங்களே
போற்றி வணங்கிடும் உன்னத பிறப்பு
காற்றிலே கரைந்திடினும் மங்குமோ சிறப்பு

,ஜெயம்
25-11-2024

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading