மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

தவிப்பு

உள்ளத்திற்குள்ளே ஏனோ தவிப்பு
சொல்லமுடியாத ஒருவித உத்தரிப்பு
உள்ளதை இல்லையென்று மறைப்பு
சொல்லாது இருந்துவிடின் சிறப்பு

சத்தம்போட்டு மனவலியைக் கூறிடலாம்
அத்தனையும் கேலியாக மாறிடலாம்
புத்தனாக இயேசுவாக எவரின்று
சுத்தமற்ற பாரென்று பாரின்று

நிலத்தைவிட்டு வந்திருக்கக் கூடாது
புலத்தினிலே இருந்திருக்கலாம் ஆடாது
பழகியவர் எல்லாம் நெருங்கி
விலகிப் போனார்கள் ஒதுங்கி

தனித்துவிட்டதை போன்ற கொடுமை

பிணிகளை சுமந்தபடி முதுமை
துணிந்துவிட்டேன் வருவதெல்லாம் தாங்க
இனிமேலும் கவலையில்லை ஏங்க

சுவருக்கும் காதுண்டு மீறிவிட்டேன்
எவரிடமும் கூறாததைக் கூறிவிட்டேன்
அவதியால் அமைதியை மீறினேன்
தவறை தவறென்று கூறினேன்

உத்தரிப்போடு பயணம் தொடரலாம்
சித்திரவதைப்பட்டு கால்கள் இடறலாம்
சித்தம் கலங்கப் போவதில்லை
அத்தன் துணையிருக்க பயமில்லை.

ஜெயம் தங்கராஜா
03-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading