சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

« தடம் மாறும் பாதையிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(630)

வெற்றிகளைப் பெற்றுக் கொள்
தோல்விகளைக் கற்றுக் கொள்
இன்றைய் விடியலுக்காய் ஏங்கிடாதே
நாளை விடியுமென நம்பி பாடுபடு

இக்கரைக்கு அக்கரை பச்சையென
சிந்தை மயங்காதே
இக்கரை இருப்பதைச் சொல்லும்
அக்கரை மாயை செய்யும்.

கானல் நீரில் தாகம் தணிக்காதே
அற்ப மகிழ்ச்சியில் மயங்கி
வாழ்க்கையை அர்ப்பணித்தால்
அற்புத வாழ்வு தொலைவாகும்

மாய வலையில் சிக்கி
மதிப்பிழந்து மாய்ந்திடாதே
காலச் சக்கரத்தில்சிக்கி
சிந்தையை சிதைத்திடாதே

நினைத்து நடக்காவிடில்
விதியை வென்று
மதியுடன் மீண்டுவா
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading