தாய்மொழியே!

நகுலா சிவநாதன்

தாய்மொழியே!

மூத்த மொழியே! முதுமொழியே!
முன்னை உதித்த தமிழ்மொழியே!
காத்த மொழியே! கனிச்சுவையே!
காலம் வென்ற இறைமொழியே!!
பூத்த மொழியே! புகழ்மொழியே!
புனிதம் நிறைத்த அறமொழியே!
சாத்தும் என்பா அணிந்திடுவாய்இ!
தாயே! தமிழே! உயர்த்திடுவாய்!

நகுலா சிவநாதன் 1798

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading