தியாக தீபமிவன்

இரா.விஜயகௌரி
வாழ்வுச் சுழல் அலையும்
வைகறை எதிர்நீச்சல்
திசைகொள் எதிர் மறைகள்
தீர்க்கவொண்ணா பெருஞ்சமர்கள்

தாய்த்தமிழும் தாய்மண்ணும் -ஊன்
உடம்பினுள்ளே தகித்தெழுத
வேர்தாங்கும் விழுதானான் -அவன்
விசைதாங்கும் படகானான்

உயிர்க்கூட்டை தாங்கி நின்று
ஊன் வதைத்து போர் விதைத்து
விடுதலைத்தீயை அவன்
அகிம்சை வழி விதைத்தெழுந்தான்

தீபத்தின் ஒளிச்சுடராய் – வாழ்வை
தந்தே தாய் மண்மடியை. காக்க
நமக்காக நமக்காக தாய்மொழிகாக்க
உயிர்தந்த மகன்நினைவு சுமந்தெழுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading