தியாக தீபம் திலீபன்

நகுலா சிவநாதன்
தியாக தீபம் திலீபன்

நல்லுர்ரின் முன்றலிலே உயிர்த்தியாகம்
நாம் பார்க்க எழுந்ததே உண்ணா நோன்பு
கல்லூரி படிக்கையிலே கண்டுகொண்டோம்
கண்ணீரும் விட்டழுதோம் கலங்கியே போனோம்

விடுதலையின் தீயாக எழுந்தான்
விண்ணதிர ஆறுநாள் நோன்பானான்
கடுகதியாய் மக்களும் புடைசூழ வந்தனர்
கண்ணீரும் கம்பலையும் தீயாக மாறியது

நீர் கூட அருந்தாது நீர்செய்த தியாகம்
தார்மீகத் தமிழுக்கும் ஆகுதியானதோ!
தியாகத்தின் செம்மலே தீரமானஉன்தியாகம்
வீர வரலாறு ஆகிப்போனதே!

நகுலா சிவநாதன் 1821

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading