17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
திருமதி. அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் வாரம் 182 26.7.2022
தலைப்பு !
துணிவே துணை”
துணிவே துணையாய் தூணாய் நின்றவள்
பணிவாய் மனத்தினில் பதியம் போட்டவள்
எண்ணிய செயலினை எளிதினில் முடித்தவள்
திண்ணமாய் நின்று திறமையை போற்றியவள்
தன்கையே தனக்குஉதவி தைரியம் காத்தவள்
தென்றலுடன் கவிதையில்தெம்மாங்கு இசைத்தவள்
புன்னகை அகம்முகம் பூரிக்க வைத்தவள்
மன்றினில்்பாமுகம் மனத்தினில்வி தைத்தவள்
நித்தமும்்தென்றலாய் நிகழ்வினில் வீசுவாள்
மொத்தமும் தாங்கிய முகத்துடன் பேசுவாள்
எத்தனை தடையையும் எதிர்கொண்டு நாடுவாள்
தத்துவப் பெண்ணவள் தரணியை ஆளுவாள்
நன்றி வணக்கம் 🙏
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...